துல்லியமாக பாயும் டிரோன்கள்… துபாயில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் தாக்குதல்

துபாயில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

டிரோன்கள் மூலம் துபாயில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் நடத்திய தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் ஈரானில் நடத்திய தாக்குதல் மத்திய கிழக்கில் தற்போது வரலாறு காணாத பதற்றம் உருவாகியுள்ளது.
இதற்குப் பதிலடியாக ஈரானும் அடுத்தடுத்து தாக்குதலை நடத்தி வருகிறது. அமெரிக்கா- இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் 5வது நாளாகத் தொடர்கிறது. ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்த ஈரான், இஸ்ரேலை குறிவைத்துத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அத்துடன் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் தூதர்களைக் குறிவைத்துத் தாக்கி வருகிறது.

இதற்கிடையே தற்போது துபாயில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஐக்கிய அமீரகத்தில் உள்ள துயில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது கடும் வெடிச்சத்தம் கேட்டது. அங்கு ஈரான் டிரோன் தாக்குதல் நடத்திய நிலையில், இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் தூதரக வளாகத்தில் சிறிய அளவில் தீ வித்து ஏற்பட்டதாகவும், அமெரிக்க தூதரக அதிகாரிகள், ஊழியர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர் என சவுதி அரேபிய பாதுகாப்பு அமைச்சக அறிக்கை கூறியுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *