
ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தப்படாத வரை, அந்த நாடுகளை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்த மாட்டோம் என்று அதிபர் மசூத் பெசஷ்கியான் கூறியுள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் ஈரான் மீது நடத்திய தாக்குதல் வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்ட நிலையில் ஈரான் புரட்சிகர ராணுவம் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க ராணுவ தளங்கள், தூதரகங்கள் மற்றும் விமான நிலையங்களை தாக்கி வருகிறது.
இஸ்ரேல் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகளில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. இதில் தெஹ்ரானில் உள்ள சர்வதேச விமான நிலையம் கடும் சேதமடைந்தது. மறுபுறம் இஸ்ரேல் – அமெரிக்கா கூட்டு தாக்குதலால் ஈரானில் இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் ஈரான் தொடக்க பள்ளி மீதான அமெரிக்காவின் தாக்குதலில் உயிரிழந்த 160 பேர் உயிரிழந்தது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் அண்டை நாடுகள் மீதான தாக்குதல்களுக்கு ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் மன்னிப்பு கோரியுள்ளார். இதுகுறித்து அவர் அரசு தொலைக்காட்சியில் பேசுகையில், ” அண்டை நாடுகளிலிருந்து ஈரான் மீது நேரடித் தாக்குதல் நடத்தப்படாத வரை, அந்த நாடுகளை இலக்காகக் கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தாது என்ற முடிவுக்கு வந்துள்ளோம், ஈரானின் இடைக்காலத் தலைமை கவுன்சில் நேற்று இந்த முடிவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், , இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிடம் ஈரான் ஒருபோதும் சரணடையாது. ஈரான் மக்கள் சரணடைய வேண்டும் என்ற எதிரிகளின் ஆசை அவர்களின் கல்லறைகளுக்கே செல்லும்,” என்று பேசியுள்ளார்.



