
பெண்களுக்கு சம வாய்ப்புகளையும், அதிகாரத்தையும் பகிர்ந்தளிக்கையில் ஒட்டுமொத்த சமுதாயம் வெற்றி பெறுகிறது என்று கமல்ஹாசன் எம்.பி. கூறியுள்ளார்.
சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் இன்று (மார்ச் 8) கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் எம்.பி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ” ஒவ்வொரு பெண்ணும் தனக்கான சிறகுகளைப் பெறுவதை உறுதி செய்வோம். பெண்களுக்கு சம வாய்ப்புகளையும், அதிகாரத்தையும் பகிர்ந்தளிக்கையில் ஒட்டுமொத்த சமுதாயம் வெற்றி பெறுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

பாமக. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,” வீட்டையும் நாட்டையும் தாங்கிப் பிடிக்கும் உலகெங்கிலும் வாழும் மகளிருக்கு இனிய மகளிர் தின வாழ்த்துகள். அண்ணா பல்கலை, ஆரம்பாக்கம், கோவை நிகழ்வுகள் இல்லாத தமிழகம் உருவாகும் நாள் தான் உண்மையான மகளிர் நாள்” என்று தெரிவித்துள்ளார்.



