
பாகிஸ்தானில் எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு 2 வாரங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக பாகிஸ்தானில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க பாகிஸ்தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக தொலைக்காட்சியில் அவர் பேசுகையில்,” மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் பாகிஸ்தானில் எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க மார்ச் 16-ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் 2 வாரம் மூடப்படும். கல்லூரி, பல்கலைக்கழகங்கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் உடனடியாக ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அடுத்த இதரண்டு மாதங்கள் அரசு அலுவலக வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் 50 சதவீதம் குறைக்கப்படும். வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே அரசு அலுவலகங்கள் செயல்படும். வங்கிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 50 சதவீத அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.



