துபாய் விமான நிலையம் அருகே பரபரப்பு… ஈரான் டிரோன்கள் விழுந்து 4 பேர் காயம்

துபாய் விமான நிலையம் அருகே இரண்டு ஈரான் டிரோன்கள் மோதி வெடித்ததில் இந்தியர் உள்பட 4 பேர் காயமடைந்துள்ளனர்.

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டு படைகள் நடத்திய தாக்குதல் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடத்து வருகிறது. இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் துபாய் விமான நிலையம் அருகே இரண்டு ஈரான் டிரோன்கள் இன்று மோதி வெடித்து விழுந்தது. இதில் கானா நாட்டைச் சேர்9ந்த இருவரும், ஒரு வங்கதேசத்தை சேர்ந்தவரும், ஒரு இந்தியரும் காயமடைந்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த டிரோன்கள் ஈரானில் இருந்து வந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் விழுந்ததா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை,

ஆனால் போர் காரணமாக, ஈரானிய டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் காரணமாக அப்பகுதியில் பாதுகாப்பு எச்சரிக்கை மிக அதிகமாக உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வான் பாதுகாப்பு அமைப்பு கடந்த சில மணிநேரங்களில் பல டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இடைமறித்துள்ளது. உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் விமான நிலையம் அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *