வடகொரியா தேர்தலில் கிம் ஜாங்-உன் பிரம்மாண்ட வெற்றி

வடகொரியா அதிபர் கிம் ஜாங்- உன்

வட கொரியாவில் நடைபெ.ற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங்- உன் மாபெரும் வெற்றியடைந்துள்ளார்.

வடகொரியாவில் 15வது உச்ச மக்கள் பேரவைக்கான தேர்தல் மார்ச் 15-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிபர் கிம் தலைமையிலான தொழிலாளர் கட்சியும், அதன் கூட்டணிக்கட்சிகளும் 99.97 சதவீத வாக்குகளைப் பெற்று அனைத்து இடங்களையும் கைப்பற்றியுள்ளன. இந்த தகவலை வடகொரியா அரசு ஊடகமான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.

தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 99.99 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். வெளிநாடுகளில் இருப்பவர்கள், கடலில் பணிபுரிபவர்கள் ( மற்றும் வாக்களிக்க வராதவர்கள் தவிர மற்ற அனைவரும் வாக்களித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும், வடகொரிய தேர்தல் வரலாற்றில் 0.07 சதவீதம் பேர் வேட்பாளர்களுக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

வடகொரியா தேர்தல் சட்டப்படி தொழிலாளர்கள், விவசாயிகள், சேவைப் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட 687 பிரதிநிதிகள் 15வது உச்ச மக்கள் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 1957-ம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக, தேர்தலில் எதிர்ப்பு வாக்குகள் இந்த முறை தான் பதிவாகியுள்ளது. இந்த தேர்தல்லி கல்லிம்கில் எண்-5-ல் கிம் ஜாங்- உன் சகோதரி கிம் யோ ஜாங் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். வடகொரியா தேர்தலில் கிம் ஜாங்- உன் பிரம்மாண்ட வெற்றி பெற்றிருந்தாலும் இந்த முறை பதிவான 0.07 சதவீத எதிர்ப்பு வாக்குகள் குறித்து தான் தற்போது அந்நாட்டில் பேச்சாக உள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *