நேபாளத்தின் புதிய பிரதமராக ராப் பாடகர் பாலேந்திர ஷா பதவியேற்பு

நேபாளத்தின் புதிய பிரதமர் பாலேந்திர ஷா

நேபாளத்தின் 47வது பிரதமராக ராப் பாடகர் பாலேந்திர ஷா இன்று பதவியேற்றுக் கொண்டார்.

நேபாளத்தில் கடந்த 2025-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் சர்மா ஓலிக்கு எதிராக, இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறியது. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதனால் ஒலி அரசு கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து, புதிய நாடாளுமன்றத்தைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது.

இதில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி (ஆா்எஸ்பி) மாபெரும் வெற்றி பெற்றது. 275 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள நாடாளுமன்றத்தில் ஆா்எஸ்பி கட்சியின் 125 உறுப்பினர்கள் நேரடியாக வெற்றி பெற்றனர். இதனைத் தொடர்ந்து, விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் 57 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மொத்தம் 182 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆர்எஸ்பி பலம் பொருந்திய கட்சியாக மாறியது..

இந்த நிலையில், நேபாள நாடாளுமன்றத்தில் புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 275 உறுப்பினர்களும் நேற்று (மார்ச் 26) பதவியேற்றனர். இந்த நிலையில், நேபாளத்தின் 47-வது பிரதமராக 35 வயது இளைஞரான ராப் பாடகரும், முன்னாள் மேயருமான பாலேந்திர ஷா இன்று(மார்ச் 27) பதவியேற்றார். அவருக்கு நேபாள அதிபர் ராம் சந்திர பௌடெல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *