பிரதமர் மோடியுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை: இந்தியா மீதான வரி குறைப்பு

பிரதமர் மோடியுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை: இந்தியா மீதான வரி குறைப்பு

பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் உரையாடியதை தொடர்ந்து இந்தியா மீதான 25 சதவீத வரி 18 சதவீமாகக குறைக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்காவின் பிரதமர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி வாயிலாக பேசினார். இந்த கலந்துரையாடலைத தொடர்ந்து பரஸ்பர வரிகளைக் குறைத்ததாக டிரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், ” ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒப்புக்கொண்டார். அவர் மீதான நட்பு மற்றும் மரியாதையாலும், அவரது வேண்டுகோளின் படியும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். அதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீமாக குறைக்கப்படும்.

அதேபோல், அமெரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளையும் அவர்கள் பூஜ்ஜியம் என்ற நிலைக்குக் குறைப்பார்கள். மேலும், அமெரிக்காவின் எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி மற்றும் பல பொருட்களை வாங்குவதாகவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். இந்தியாவுடனான எங்களது அற்புதமான உறவு வரும் காலங்களில் இன்னும் வலுவாக இருக்கும். பிரதமர் மோடியும் நானும் காரியங்களைச் சாதிக்கும் மனிதர்கள்” என்று தெரிவித்துள்ளார்..

டிரம்பின் பதிவிற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ” “எனது இனிய நண்பர் அதிபர் டிரம்ப் உடன் பேசியது மகிழ்ச்சி. மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாராகும் பொருட்களுக்கான வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. இதற்காக 140 கோடி இந்திய மக்கள் சார்பாக அதிபர் டிரம்ப் அவர்களுக்குப் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளும், மிகப்பெரிய ஜனநாயக நாடுகளும் இணைந்து செயல்படும்போது, அது நமது மக்களுக்குப் பயனளிப்பதோடு, இருதரப்பு ஒத்துழைப்பிற்கான அபரிமிதமான வாய்ப்புகளையும் உருவாக்குகிறது. உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழுமைக்கு அதிபர் டிரம்ப் அவர்களின் தலைமை மிகவும் அவசியமானது. அமைதிக்கான அவரது முயற்சிகளுக்கு இந்தியா தனது முழு ஆதரவை வழங்குகிறது. எங்களது கூட்டாண்மையை முன்னெப்போதும் இல்லாத உயரத்திற்குக் கொண்டு செல்ல அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலோடு காத்திருக்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *