இளம்பெண் சுட்டுக்கொலை… ஜிம்மில் நடந்த பயங்கரம்

ஜிம்மில் பணிபுரிந்த பெண் ஊழியரை சகஊழியர் சுட்டுக்கொலை செய்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் கேசவ் புரத்தில் உடற்பயிற்சி கூடம்(ஜிம்) இயங்கி வருகிறது. சம்பவ நாளான நேற்று இரவு 20 வயது இளம்பெண் ஒருவர் சக ஊழியரால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதன் பின் துப்பாக்கியால் சுட்டவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

கொலை நடந்த தகவல் கிடைத்ததும் போலீஸார் விரைந்து விசாரணை நடத்தினர். தடவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண்ணை சுட்டுக் கொலை செய்தவர் சௌரப்(23) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் மூன்று மாதங்களுக்கு முன்பு தான் உடற்பயிற்சி கூடத்தில் பராமரிப்பாளராக பணிக்கு சேர்ந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட இளம்பெண் அதே கட்டிடத்தில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் பணிபுரிந்துள்ளார். ஏதோ ஒரு காரணத்தை கூறி அப்பெண்ணை மூன்றாவது மாடியில் உள்ள அறைக்கு சௌரப் வரவழைத்துள்ளார். அப்போது அவர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து இளம்பெண்ணை சுட்டுக் கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. எதற்காக சௌரப், இளம்பெண்ளணை சுட்டுக் கொலை செய்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜிம்மில் இளம்பெண் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *