
ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் புதிததாக கட்டப்பட்ட ராமர் கோயிலில் நன்கொடை மற்றும் காணிக்கை பணம் மோசடி செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு படை 8 பேர்களை கைது செய்துள்ளது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல கோடி நிதி மற்றும் கிலோ கணக்கில் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டது கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு புகாரைக் கண்டித்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் உண்டியலில் பணம் செலுத்தி இன்று (ஜூலை 31) நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ராமர் கோயில் உண்டியல் காணிக்கை மற்றும் நன்கொடைகளில் பெருமளவில் முறைகேடு மற்றும் திருட்டு நடந்துள்ளதாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் குற்றம் சாட்டினர்.
அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியல்களில் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தி மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பிக்கள் உண்டியலில் பணத்தைப் போட்டு நூதனப் போராட்டத்தை மேற்கொண்டனர். ராமர்கோயிலுக்குப் பக்தர்கள் வழங்கிய காணிக்கைகளில் முறைகேடு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய – மாநில அரசுகளைக் கண்டித்து எம்.பிக்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விவாதிக்க கோரி நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் அமளியில் வலியுறுத்தினர். இதனால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. முன்னாதாக மக்கவையில் பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு (திருத்த) மசோதா, 2026 விவாதமுமின்றி நிறைவேற்றப்பட்டது.



