மதுரையில் அதிமுகவின் ‘சீக்ரெட் எஸ்’ பிளான்: மாறும் தேர்தல் ரிசல்ட்!

மதுரையில் ‘சீக்ரெட் எஸ்’ திட்டத்தின் மூலம் ஐந்து தொகுதிகளை கைப்பற்ற அதிமுக திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. மதுரையில் கிழக்கு, மேற்கு, தெற்கு, மத்தி, வடக்கு, மேலூர், சோழவந்தான், திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய பத்து தொகுதிகள் உள்ளன. இதில் திமுக கூட்டணியில் மேலூர், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தெற்குத் தொகுதியில் மதிமுக வேட்பாளர் மு.பூமிநாதன் போட்டியிடுகிறார். தெற்கு உள்ளிட்ட 8 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் தான் திமுக போட்டியிடுகிறது.

அதிமுக கூட்டணியில் மதுரை தெற்குத் தொகுதியில் பாஜக போட்டியிடுகிறது. பேரா.ராம ஸ்ரீனிவாசன் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். மதுரை மத்திய தொகுதியில் வி.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி சார்பில் இயக்குநர் சுந்தர்.சி போட்டியிடுகிறார். இவர் அதிமுக சின்னத்தில் தான் போட்டியிடுகிறார். மற்ற தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. நாளையுடன் (ஏப்ரல் 21) தேர்தல் பிரசாரம் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில், வெளியான பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் திமுக கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் ‘சீக்ரெட் எஸ்’ என்ற திட்டத்தை அதிமுக கையில் எடுத்துள்ளது. மதுரையில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்த நிலையில், ஆளுங்கட்சியின் பணப்பட்டுவாடாவை முட்டுக்கட்டை போடுவதற்கு அதிமுக செய்துள்ள பிளாஸ் தான், ‘சீக்ரெட் எஸ்’. அதாவது மதுரை மாவட்டத்தில் உள்ள ஆளுங்கட்சி வட்ட, ஒன்றிய செயலாளர்களை வைட்டமின் ப மூலம் சரிகட்ட அதிமுக முடிவு செய்துள்ளது. அந்த திட்டம் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுகவிற்கு சாத்தியமாகியுள்ளதாக கூறப்படுகிறது.குறிப்பாக, சமூக ரீதியாக இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யும் பணத்தை இந்த செயலாளர்களுக்கு கொடுத்து விட்டால், ஆளுங்கட்சியின் பெரும்பாலான வாக்காளர்களுக்கு செல்லும் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியும் என்று அதிமுக திட்டமிட்டுள்ளது. அது மதுரை நகர் மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் இந்த திட்டம் சாத்தியமாகியுள்ளது. சமீபத்தில் வெளியான ரஜினி படத்தின் தலைப்பாக கொண்ட திமுக ஒன்றிய செயலாளர். மற்றொரு ரஜினி படத்தை தனது பெயருடன் வைத்துள்ள ஒரு செயலாளர், தென் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக அமைச்சரின் பெயரைக் கொண்ட ஒரு செயலாளர் என பலர் அதிமுகவின் பேரத்திற்கு பணிந்து விட்டதாக புறநகர் பகுதிகளில் பரபரப்பாக பேசப்படுகிறது. மாநகர் பகுதிகளில் அடுத்த தெருவில் இடம் பெயர்ந்தவர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பட்டுவாடா செய்யக் கொடுத்த மொத்த பணத்தையும் ஸ்வாகா செய்து அதிமுகவிற்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர் சில திமுக செயலாளர்கள் என்று கூறப்படுகிறது.

இதை விட கொடுமை என்னவென்றால், ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒரு வேட்பாளர் பெண் வாக்காளர்களுக்கு இலவசமாக சேலை விநியோகம் செய்யச் சொல்லி கட்சியினரிடம் கொடுத்துள்ளார். ஆனால், அவர் மொத்த சேலையையும் சுட்டு பழைய இரும்புக்கடையில் விலை பேசியுள்ள விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒரு தெருவில் பணப்பட்டுவாடா நடந்து அடுத்த தெருவில் பணப்பட்டுவாடா நடக்கவில்லை என்ற தகவல் பரவி செயலாளர்களின் போன்களை தொடர்பு கொண்டவர்களுக்கு பிஸி மோடு வைத்து அதிமுக சீக்ரெட் எஸ் திட்டத்திற்கு திமுகவை சேர்ந்த சில செயலாளர்கள் விலை போனதாக புகார் எழுந்துள்ளது.

ஒரு சில பகுதிகளில் 1500, ஒரு சில பகுதிகளில் 1000 ரூபாய் என பணம் பட்டுவாடா செய்யக் கொடுத்த பணத்தை மொத்தமாக சில செயலாளர்கள் சுருட்டியதாக வாக்காளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த திட்டத்தை அறிந்து கொண்ட கூட்டணி வேட்பாளர் ஒருவர், உள்ளூர் திமுகவினரை நம்பாமல், வெளியூரில் இருந்து தனது உறவினர்களை பட்டுவாடாவிற்கு அழைத்து வந்துள்ளார்.

தங்களின் ‘சீக்ரெட் எஸ்’ திட்டத்தின் மூலம் மதுரை மாவட்டத்தில ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்று விட முடியும் என அதிமுக கணக்குப் போட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்படுகிறது. ‘சீக்ரெட் எஸ்’ வெற்றியா, தோல்வியா என்பது அன்றைய தினம் தெரிந்து விடும்..

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *