நெடுஞ்சாலைத்துறையில் 100 சதவீத வாக்குப்பதிவு:பட்டய பொறியாளர் சங்கம் வேண்டுகோள்

நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றும் 20,000 பணியாளர்களும் வாக்கு செலுத்த வேண்டும் என்று பட்டய பொறியாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் மு.மாரிமுத்து இன்று (ஏப்ரல் 21) வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23.04.2026 அன்று நடைபெற உள்ளது. நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்று;k தலைமைப் பொறியாளர் முதல் உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் வரை உள்ள அனைத்து அலுவலர்கள் மற்றும் தலைமை வரைவாளர் முதல் திறன்மிகு உதவியாளர் நிலை- 2 பணியாளர்கள், மேலும் கோட்டக் கணக்கர் முதல் காவலர் வரை உள்ள அலுவலர்கள் மற்றும் சாலைப்பணியாளர்கள் என மொத்தமாக 20,000 பணியாளர்கள் உள்ளோம்.

நம்மில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தபால் வாக்கு அளித்திட வேண்டுகிறோம். மற்ற அனைவரும் தவறாமல் 23.04..2026 அன்று வாக்குச்சாவடிக்குச் சென்று தவறாமல் நமது வாக்குகளைச் செலுத்திட வேண்டுகிறோம். இது நமது கடமை என்பதை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *