உயர்நீதிமன்றம் அதிரடி: முன்னாள் எம்எல்ஏ இசக்கி சுப்பையா மனு தள்ளுபடி

முன்னாள் எம்எல்ஏ இசக்கி சுப்பையாவுக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட இசக்கி சுப்பையா தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வி.பி.துரையை விட 10,245 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் தனது பின் பதவியை ராஜினாமா செய்த இசக்கி சுப்பையா தவெகவில் இணைந்தார்.

இதனால் அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி வாக்காளர் காந்திமதிநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கில் பதிலளிக்கும்படி இசக்கி சுப்பையாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்த நிலையில், தனக்கு எதிரான இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி இசக்கி சுப்பையா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி, வாக்காளர் காந்திமதிநாதனின் மனுவை நிராகரிக்க மறுத்து, இசக்கி சுப்பையாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதேபோல, தேர்தல் வழக்கு தொடர்பான மனுவில், குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள சில பத்திகளை நீக்க வேண்டும் என்ற இசக்கி சுப்பையாவின் கோரிக்கையை ஏற்று, அந்த பத்திகளை நீக்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *