தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

இந்திய தேர்தல் ஆணையம்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையோட்டி ,இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக அனைத்து கட்சியினரும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. மேலும் தேர்தல் அறிக்கையை முன் வைத்து கட்சிகளின் தலைவர்கள் பிரசாரத்தையும் துவக்கி விட்டனர். வேட்பாளர்கள் வீடு, வீடாக சென்று வாக்குகளைச் சேகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (மார்ச் 30) தொடங்குகிறது. காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை வேட்புனு தாக்கல் செய்யலாம். இன்று முதல் ஏப்ரல் 2,4,6 ஆகிய நான்கு நாட்கள் மட்டுமே வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும். இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்பிக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் சுவிதா இணையதளம் மூலமும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்ய 8 நாட்கள் அவகாசம் இருந்தாலும் இடையில் 4 நாட்கல் விடுமுறை தினம் வருவதால் அனைத்து கட்சியினரும் இன்று முதல் நாளிலேயே விருப்பமனு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *