
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்ச் 31-ம் தேதி திருவாரூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி 164 திமுக வேட்பாளர்கள் பட்டியலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று வெளியிட்டார். அப்போது விரைவில் தேர்தல் பிரசாரத்தை தொடங்க இருப்பதாகவும் அறிவித்தார். இந்த நிலையில், மார்ச் 31-ம் தேதி மாலை 5 மணியளவில் திருவாரூர் தெற்கு ரத வீதியில் தனது தேர்தல் பிரசாரத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்க உள்ளார்.
திருவாரூர் மாவட்டம், தெற்கு ரத வீதியில் அன்றைய தினம் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
ஏப்ரல் 1-ம் தேதி திருச்சி மாவட்டம் உழவர் சந்தையில் காலை 9 மணிக்கும், கரூர் மாவட்டம் ராயனூர் பகுதியில் மாலை 5 மணிக்கும் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். ஏப்ரல் 2-ம் தேதி ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் காலை 9 மணிக்கும், கோவை மாவட்டம் கொடிசியா மைதானத்தில் மாலை 5 மணிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். இக்கூட்டங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்து இந்த பொதுக் கூட்டங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக முதலமைச்சர் வாக்கு சேகரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



