ஆட்சியைப் பிடிக்க போவது யார்?… இன்று மாலை வெளியாகிறது கருத்துக்கணிப்பு

தமிழ்நாடு,. கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய 5 மாநில தேர்தல் கருத்துக் கணிப்புகள் இன்று மாலை வெளியாக உள்ளன.

கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய மூன்று மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 9-ம் தேதி நடந்தது முன்றது. இதில் அசாமில் 85.5 சதவீத வாக்குகளும், கேரளாவில் 79.63 சதவீத வாக்குகளும், புதுச்சேரியில் 91.23 சதவீத வாக்குகளும் பதிவானது. அதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 85.10 சதவீத வாக்குகள் பதிவானது.

அதே தினத்தில் மேற்கு வங்கத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.இதே தினத்தில் மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 29) மாலையுடன் நிறைவடைகிறது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு வாக்காளர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு அதன் அடிப்படையில் கருத்துக்கணிப்புகள் வெளியிடப்படுகின்றன.

மே- 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்ற நிலையில், இந்த கருத்துக்கணிப்புகள் ஓரளவு களநிலவரத்தை தெரியப்படுத்தும் என்று தேர்தல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதன்படி தமிழ்நாடு, மேற்கு வங்கம், புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களுக்குமான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் இன்று மாலை வெளியாகின்றன.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *