கோலி அதிரடியில் பெங்களூரு 2வது முறையாக சாம்பியன்!

விராட் கோலி அதிரடி ஆட்டத்தால் பெங்களூரு அணி இரண்டாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.

ஐபிஎல் டி20 தொடரின் இறுதிப் போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இதில் குஜராத் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஒவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை சேர்த்தது. அந்த அணியின் வாஷிங்டர் சுந்தர் 37 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார்.

இதனைத் தொடர்ந்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியது. அதிரடியான ஆடிய பெங்களூரு அணி 18 ஓவர்கள் முடிவில் பெங்களூரு 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் விளாசியது. இதில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக ஆடிய விராட் கோலி 75 ரன்கள் குவித்தார். இதன் மூலம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது. இது பெங்களூரு அணியின் 2வது ஐபிஎல் கோப்பையாகும்.

இதன் மூலம் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ராஜத் படிதார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். முன்னதாக கடந்த ஐபிஎல் 2025 தொடரிலும் ராஜத் படிதார் தலைமையிலான ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்தது. தற்போது இரண்டாவது கோப்பையையும் கைப்பற்றி புதிய வரலாற்றையும் படைத்துள்ளது. இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஆர்சிபி அணியின் அதிரடி வீரர் விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

பரிசுகளை குவித்த வைபவ் சூர்யவன்ஷி

இந்த ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் 776 ரன்களைக் குவித்து அசத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு ஆரஞ்சு தொப்பி விருதுடன் ரூ.10 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. இந்த ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் விளையாடி 29 விக்கெட்டுகளை கைப்பற்றிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் காகிசோ ரபாடாவுக்கு பர்பிள் தொப்பியும், ரூ.10 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. இந்த ஐபிஎல் தொடரில் தனது அதிரடியான பேட்டிங்கின் மூலம் கவனத்தை ஈர்த்த வைபவ் சூர்யவன்ஷிக்கு தொடரின் சிறந்த வீரர் விருதும், ₹10 லட்சம் பரிசுத்தொகையுடன், புதிய டாடா சியரா காரும் பரிசாக வழங்கப்பட்டது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *