‘நாய்க்குட்டிக்கு பிஸ்கட் போட்டால் கூட’… எடப்பாடியை விளாசிய சசிகலா!

ஒரு நாய்க்குட்டிக்கு பிஸ்கட் போட்டால் கூட அது உண்மையாக இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமியை சசிகலா விமர்சனம் செய்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமி, சசிகலா காலில் விழுந்து ஆசீர்வாதம் புகைப்படங்களை பொதுமக்களிடம் காட்டி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால் எடப்பாடி பழனிசாமி டென்சனாகி, உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

இந்த நிலையில், ராஜபாளையத்தில் அஇபுதமமுக தலைவர் சசிகலா பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில்,” உதயநிதி ஸ்டாலின் காட்டிய புகைப்படம் உண்மை தான். அதுக்கு போய் அந்த பையனை நீ உயிரோட இருந்திருக்கக் கூடாதுன்னு சொல்லலாமா? பதவி கொடுத்தவங்களுக்கு உண்மையாக இருந்திருக்கனும். ஒரு நாய்க்குட்டிக்கு பிஸ்கட் போட்டால் கூட அது உண்மையாக இருக்கும். நீங்கள் செய்ததை அவர் காட்டுவது என்ன தவறு” என்று எடப்பாடி பழனிசாமியை சசிகலா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *