
கோவை வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. கோவை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன், இந்த தேர்தலில் கோவை வடக்குத் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த ஒரு வாரமாக தொகுதி முழுவதும் வானதி சீனிவாசன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை எதிர்த்து திமுக மாவட்ட செயலாளர் செந்தமிழ்செல்வன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். கோவை தெற்குத் தொகுதியில் அவர் போட்டியிடுகிறார்.
இதன் காரணமாக கோவை தெற்கில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று வானதி சீனிவாசன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அவரை ஆதரித்து மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நேற்று முன்தினம் பிரச்சாரம் செய்தார். பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று (ஏப்ரல் 11) பிரச்சாரம் செய்ய இருந்தார். இந்த நிலையில், திடீரென வானதி சீனிவாசனுக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காலில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அடுத்த 48 மணி நேரத்திற்கு அவர் முழுமையாக ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் வானதி சீனிவாசனை ஆதரித்து கோவை வடக்குத் தொகுதியில் அண்ணாமலை தனித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்.



