அதிர்ச்சி… எடப்பாடி பழனிசாமி பாதுகாப்பு வாகனம் மோதி இளைஞர் பலி

சிவகங்கையில் எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் ஈடுபட்டார்.

எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு வாகனம் மோதி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் தமிழ்நாடு முழுவதும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சிவகங்கையில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களை ஆதரித்து நேற்று (ஏப்ரல் 1) பரப்புரை மேற்கொண்டார்.

சிவகங்கையில் எடப்பாடி பழனிசாமி மேற்கோண்ட பிரச்சாரம்.

இதன் பின் பரப்புரை முடிந்து புதுக்கோட்டைக்கு எடப்பாடி பழனிசாமி புறப்பட்டுச் சென்றார். அப்போது மின்வாரிய அலுவலகம் அருகே வந்த டூவீலர் மீது எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு வாகனம் மோதியது. இதில் டூவீலரில் வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார், விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் விசாரணை நடத்திய போது, விபத்தில் உயிரிழந்தது மதகுபட்டி மேலதெருவைச் சேர்ந்த ஆறுமுகம் (27) என்பது தெரிய வந்தது. இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *