27 ஆண்டுகளுக்குப் பின் நாளை தேர்தல் ஆணையர்களின் தேசிய மாநாடு

புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபம்

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில் மாநில தேர்தல் ஆணையர்கள் மாநாடு நாளை நடைபெறுகிறது.

தமிழ்நாடு, மேற்கு வங்கம் , அசாம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை வழங்க மாநில தேர்தல் ஆணையர்களின் மாநாடு நாளை ( பிப்ரவரி 24) புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளது.

தேசிய அளவிலான இந்த மாநாடு சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நடைபெறுகிறது. இந்த மாநாடு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில் நடைபெறுகிறது. தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சாந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இதில் அனைத்து மாநில தேர்தல் ஆணையர்கள், அவர்களது சட்ட மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் 36மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

தேர்தல் நடைமுறைகளை சீரமைக்கும் நோக்கில் நடைபெறும் இந்த தேசிய மாநாட்டில் தேர்தல் சட்டங்கள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தகுதி குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *