
விபத்தில் சிக்கிய விமானம்
ஜார்க்கண்ட்டில் ஏர் ஆம்புலன்ஸ் விமானம் விபத்திற்குள்ளானதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் இருந்து டெல்லிக்கு 7 பேருடன் விடி-ஏஜெவி மருத்துவ விமானம் நேற்று 7 பேருடன் புறப்பட்டுச் சென்றது. இதன் பிறகு அந்த விமானத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்த நிலையில், அந்த விமானம் சிமாரியா சத்ரா அருகே அடர்ந்த காட்டுக்குள் விழுந்து விபத்திற்குள்ளானது தெரிய வந்தது. இதனால் விபத்தில் சிக்கியவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. முதலில் கிடைத்த தகவலின்படி இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்பட்டது.
இன்று (பிப்ரவரி 24) சிமாரியா சத்ரா அருகே விமானம் விபத்திற்குள்ளான இடத்தில் மீட்பு படையால் 7 பேர் உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ராஞ்சி விமான நிலைய இயக்குநர் குமார் உறுதிப்படுததியுள்ளார். சத்ரா மாவட்டத்தில் உள்ள சிமாரியா அருகே விமானம் விபத்தில் சிக்கியதாகவும், விமானத்தில் இருந்த 7 பேரும் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தீப்பிடித்து விழுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 7 பேரை பலி கொண்ட இந்த விபத்து குறித்து சிவில் போக்குவரத்து இயக்குநரகம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. அவசர மருத்துவ சிகிச்சைக்காக ஏர்ஆம்புலன்ஸ் விமானத்தில் சென்ற நோயாளியும், மருத்துவக்குழுவினர் 7 பேரும் உயிரிழந்தது ஜார்க்கண்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



