குளிர்பானத்தில் விஷத்தை கலந்து… ஆன்லைன் சூதாட்டத்தால் குடும்பமே தற்கொலை!

ஆன்லைன் சூதாட்டத்தால் லட்சக்கணக்கான ரூபாயை இழந்து கடனில் தவித்த குடும்பத்தினர் விஷம் குடித்தனர். இதில் தந்தை, மகள் உயிரிழந்தனர். தாய் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மத்தியப்பிரதேசம் மாநிலம், ஷாஹ்தோல் மாவட்டம் புரானி புஸ்தி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்லால் குப்தா(40). ஆட்டோ பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ராஜ்குமார் குப்தா(34). இந்த தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் இருந்தனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான சங்கர்லால் குப்தா கடன் வாங்கி சூதாடியுள்ளார். இதனால் 4 லட்ச ரூபாய் சூதாட்டத்தில் இழந்துள்ளார். இதனால் கடன் கொடுத்தவர்கள் அவரை பணம் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் பெரும் மனநெருக்கடிக்கு சங்கர்லால் குப்தா உள்ளானார்.

இதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள சங்கர்லால் குப்தா முடிவு செய்தார். குளிர்பானத்தில் விஷம் கலந்து தனது மனைவி, மகளுக்கு கொடுத்து விட்டு சங்கர்லால் குப்தாவும் குடித்துள்ளார். அந்த நேரத்தில் அவர்களது 15 மகன் வெளியே சென்றிருந்தார். அவர் வீட்டில் வந்து பார்த்த போது அவரது தந்தை, தாய், சகோதரி ஆகியோர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்கள் மூவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன்றி சங்கர்லால் குப்தாவின் 16 வயது மகள் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது இறுதிச்சடங்குகளை முடிந்து முடித்து உறவினர்கள் வீடு திரும்பிய போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சங்கர்லால் குப்தா உயிரிழந்தார் என்ற தகவல் தெரிய வந்தது. அவரது மனைவி ராஜ்குமார் குப்தா உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் திவான் கூறுகையில், “நேற்று இரவு, மாவட்ட மருத்துவமனையின் புறக்காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தது. காலையில், விஷம் குடித்த மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் 17 வயது சிறுமி அடங்குவர். விஷம் குடித்த பிறகு மூவரின் நிலையும் கவலைக்கிடமாக இருந்தது. அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுமியின் உடல்நிலை மோசமடைந்து, மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லுமாறு கூறப்பட்டது. அவள் அங்கேயே இறந்துவிட்டாள். சிறிது நேரத்திற்குப் பிறகு தந்தையும் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது. எந்தப் பிரச்னைக்கும் தற்கொலை தீர்வல்ல. .
” என்றார். ஆன்லைன் சூதாட்டம் ஒரு குடும்பத்தின் உயிரை பறித்த சம்பவம் ஷாஹ்தோல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *