இந்திய போர் விமானம் விபத்தில் சிக்கியதா?… அசாமில் தேடும் பணி தீவிரம்

இந்தியாவின் சுகோய் போர் விமானம்.

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான சுகோய்-30 ரக போர் விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அசாம் மாநிலம், ஜோர்ஹட்டி விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட சுகோய்-30 ரக போர் விமானம் சுமார் நேற்று இரவு 7.42 மணிக்கு திடீரென ரேடாரில் இருந்து மறைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சுகோய் 30 (Su-30 MKI) போர் விமானம் ராடார் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டதையடுத்து, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜோர்ஹாட் விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட சுகோய் (Su-30 MKI) விமானம் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை. அந்த விமானம் கடைசியாக இரவு 7:42 மணிக்குத் தொடர்பில் இருந்தது. இது குறித்த கூடுதல் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் உடனடியாக முடுக்கிவிடப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அசாமின் கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் விமானம் விபத்துக்குள்ளானதாக வரும் தகவல்கள் குறித்து உண்மையை அறிய விமானப்படை குழு ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாகக் குவஹாத்தியில் உள்ள பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *