இந்தியாவில் பிரீமியம் பெட்ரோல் விலை அதிரடியாக உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

இந்தியாவில் இன்று முதல் பிரீமியம் பெட்ரோல் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்தியாவில் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் பிரீமியம் பெட்ரோலின் விலையை இன்று (மார்ச் 20) முதல் உயர்த்தியுள்ளன. இது தொடர்பான அறிவிப்பின் படி, இந்த எரிபொருளின் விலை ஒரு லிட்டருக்கு 2 ரூபாய் முதல் ரூ. 2.30 வரை உயர்த்தப்பட்டுள்ளது. HPCL-ன் Power, BPCL-ன் Speed, IOCL-ன் XP95 ஆகிய ப்ரீமியம் பெட்ரோல் வகைகளின் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் இன்று காலை 6 மணி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. தற்போது, மத்திய கிழக்கில் ஆழ்ந்த புவிசார் அரசியல் பதற்றங்கள் நிலவுகின்றன. இந்த சர்வதேச ஸ்திரத்தன்மையின்மை உலகெங்கிலும் உள்ள எரிபொருள் சந்தைகளை கடுமையாக பாதித்துள்ளது.

சர்வதேச கச்சா எண்ணெய் மற்றும் விநியோகச் சங்கிலி மீது இதுபோன்ற அழுத்தங்கள் ஏற்படும் போதெல்லாம், அவை உள்நாட்டு சந்தை விலைகளை நேரடியாக பாதிக்கின்றன. இதனால்தான் இந்த சர்வதேச அழுத்தத்தைச் சமாளிப்பதற்காக, இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் பிரீமியம் பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளன. சாதாரண பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லாததால், பொதுமக்களுக்கு இந்த உயர்வு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும், ப்ரீமியம் பெட்ரோல் பயன்படுத்துபவர்களுக்கு கூடுதல் செலவு ஏற்படும். இது வாகன உரிமையாளர்கள் மற்றும் தொழில்துறையினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது,

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *