ஆர்ஆர்எஸ் அமைப்பில் அடியோடு மாற்றம்:இந்தியா 80 கோட்டங்களாக பிரிப்பு

ஆர்ஆர்எஸ் ஊர்வலம்.

ஆர்எஸ்எஸ் நிர்வாக அமைப்பில் மாநிலங்கள் நீக்கப்பட்டு இந்தியா 80 கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கப்பட்டு நூறாண்டுகளாகும் நிலையில், அதன் நிர்வாக அமைப்பில் அடியோடு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஹரியாணாவில் ஆர்எஸ்எஸ், பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹொசபலே இதற்கான அறிவிப்வை வெளியிட்டார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹொசபலே

அதன்படி, ஆர்எஸ்எஸ் , நிர்வாக அமைப்பில், இனி மாநிலங்கள் இருக்காது என்றும் அதற்கு பதிலாக, ஒட்டுமொத்த நாடும், 80 கோட்டங்களாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதாவது மாநிலங்களை அடிப்படையாகக் கொண்ட அமைப்பு முறை நீக்கப்பட்டு இந்தியா முழுவதும் 80 கோட்டங்களாக உருவாக்கப்பட்டுள்ளன.

நான்கு முதல் ஆறு கோட்டங்கள், பிரதேசம் என்று அழைக்கப்படுவதாகவும், ஏற்கெனவே உள்ள விபாக், ஷேத்ரம் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய மாற்றங்களின்படி, ஆர்எஸ்எஸ் நிர்வாக அமைப்பில் தமிழ்நாடு ஆறு கோட்டங்களாக பிரிக்கப்பட உள்ளது. மாநில தலைவர், மாநிலச் செயலர், மாநில அமைப்பாளர் போன்ற பொறுப்புகள் இனி, கோட்டத் தலைவர், செயலர், அமைப்பாளர் என்று மாறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *