
மனைவியை கணவரும், அவரது அண்ணனும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், ஜஹாங்கிராபாத் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் லால் சிங் திருமணமாகி மனைவியுடன் வசித்து வந்தார். லால்சிங்கின் அண்ணன் ஷியோராஜ் சிங். இவர் அப்பகுதியில் ஹோம் கார்டு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், ஜஹாங்கிராபாத் காவல் நிலையத்தில் லால் சிங்கின் மனைவி அளித்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னை கணவரும், அவரது அண்ணன் ஷியோராஜ் சிங்கும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து விட்டனர் என்று கதறி அழுதார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார், இந்த புகார் குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது லால் சிங்கும், அவரது அண்ணன் ஷியோராஜ் சிங்கும் சேர்ந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து ஹோம் கார்டு பணியில் இருந்து ஷியோராஜ் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



