பட்டப்பகலில் நடுரோட்டில் பயங்கரம்… கழுத்தை அறுத்து மனைவியை கொன்ற கணவன்

மனைவியின் கழுத்தை அறுக்கும் அக்சய்.

மனைவியை கழுத்தை அறுத்து காரை ஏற்றி கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், கலபுரகி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அக்சய். இவரது மனைவி ஷைலா(28) மகாராஷ்டிராவை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் நேற்று காரில் புனித தலமான கங்கபுரத்திற்கு சென்றனர். காலை 11 மணியளவில் அவர்கள் இருவரும் அஃப்சல்பூர் தாலுகா பலுர்கி கிராமத்திற்கு அருகே வந்தனர். அப்போது இவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஷைலாவை காரில் இருந்து அக்சய் வெளியே தள்ளி விட்டார். இந்த காட்சியை அவ்வழியே வந்த ஒருவர், செல்போனில் படம் எடுத்துள்ளார். தரையில் விழுந்த மனைவியின் தலைமுடியைப் பிடித்து அக்சய் சரமாரியாக தாக்கினார். இதனால் அவ்வழியே சென்றவர்களிடம் ஷைலா உதவி கேட்டு கதறியுள்ளார். அப்போது அவரது கழுத்தை கூர்மையான ஆயுதத்தால் அக்சய் அறுத்துள்ளார்.

இதையடுத்து அவ்வழியாக வந்தவர்கள், அக்சயை சமரசம் செய்து ஷைலாவை காரில் ஏற்றி அனுப்பினர். அங்கிருந்து காரை வயல் வெளிப்பகுதிக்கு ஓட்டடிச் சென்ற அக்சய், மனைவியை காரில் இருந்து மீண்டும் கீழே தள்ளினார். அத்துடன் மனைவியின் மீது காரை ஏற்றிக் கொன்று விட்டு அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்று விட்டார். பதைபதைக்க வைக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக தகவல் அறிந்த அஃப்சல்பூர் போலீஸார் விரைந்து சென்று ஷைலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் வழக்குப்பதிவு செய்து அக்சயை தேடி வருகின்றனர். அக்சய்க்கும், ஷைலாவிற்கும் திருமணமாகி 4 ஆண்டுகளாகிறது என்று போலீஸார் தெரிவித்தனர். பட்டப்பகலில் நடந்த சம்பவம் கலபுரகி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *