வரலாறு காணாத வாக்கு மழை… 3 மாநில தேர்தலில் நடந்த திடீர் மாற்றம்

புதுச்சேரி, கேரளா, அசாம் மாநில சட்டமன்றத் தேர்தலில் வரலாறு காணாத அளவில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

புதுச்சேரி கேரளா அசாம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் நேற்று (ஏப்ரல் 9) நடைபெற்றது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள்(எஸ்ஐஆர்) இந்த தேர்தல் நடைபெற்றுள்ளது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்று தேர்தல் நடைபெற்றது. துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, உள்ளிட்ட பலர் குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தனர். புதுச்சேரியில் சுமார் 90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த. 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், 85.57 சதவீத வாக்குகள் பதிவாகின,. புதுச்சேரியில் எஸ்ஐஆர் பணிகள் மூலம் 95 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில், வரலாறு காணாத வகையில் 90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில், 140 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. திருச்சூரில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், கண்ணூரில் முதலமைச்சர் பினராயி விஜய், குருவாயூரில் மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி, திருவனந்தபுரத்தில் பாஜக மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர், திருவனந்தபுரத்தில் நடிகர் மோகன்லால், கொச்சியில் நடிகர் மம்முட்டி உள்ளிட்ட பலர் வாக்களித்தனர். கேரளாவில் 78 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு தேர்தல்களாக 77 மற்றும் 75 சதவீத வாக்குகளே பதிவாகியள்ளன. ஆனால், இந்த முறை வரலாறு காணாத அளவில் 78.27 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

அசாம் மாநிலத்தில் உள்ள 126 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணி முதலே வாக்களிக்க மக்கள் திரண்டனர். அசாமில் இந்த தேர்தலில் 85.65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2021-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 82.04 சதவீத வாக்குகளே பதிவாகின. ஆனால், இந்த முறை 85.65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. நேற்று நடைபெற்ற மூன்று மாநில தேர்தலிலும் வரலாறு காணாத வகையில் வாக்குகள் பதிவாகியுள்ளன. இது யாருக்கு சாதகம் என்பது மே 4-ம் தேதி வாக்குகளை எண்ணும் போது தெரிந்து விடும்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *