சர்ச்சைக்குரிய பேச்சு… மம்தா பானர்ஜி மீது வழக்குப்பதிவு

சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாணவர் தலைவர் உஸ்மான் பின் ஹாதி படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலை அந்நாட்டின் அமைதியின்மையை ஏற்படுத்தியது. இந்த கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் சிலர், வங்கதேசத்தில் இருந்து தப்பி, மேகாலயா எல்லை வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தனர். இதையடுத்து அவர்கள் வங்க சிறப்பு அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் கொல்கத்தாவின் தர்மதலா பகுதியில் கடந்த ஜூன் 2-ம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அன்றைய முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி பேசினார். அப்போது அவர், மாணவர் தலைவர் உஸ்மான் பின் ஹாதி படுகொலையை குறிப்பிட்டு பேசினார். அதில்,, “வங்கதேசத்தில் நடந்த ஒரு முக்கியக் கொலை வழக்கு குறித்த முழு விவரங்களும் எனக்குத் தெரியும்; அதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். அந்த தகவல்களை நான் வெளியிடப் போவதில்லை, அவ்வாறு வெளியிட்டால் வங்கதேசத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை உருவாகக்கூடும்” என்று கூறினார்….

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *