
டெல்லி ஏ.ஐ மாநாட்டில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
டெல்லியில் ஏ.ஐ மாநாடு நடைபெறும் பகுதிக்குள் புகுந்த காங்கிரஸ் கட்சியினர் மேலாடையின்றி அரை நிர்வாணப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியில் செயற்கை நுண்ணறிவு மாநாட்டை இந்தியா நடத்துகிறது. இந்த மாநாடு டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இன்று (பிப்ரவரி 20) மாநாட்டு நிகழ்ச்சியில் ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ், கிரீஸ் பிரதமர் கிரிகோஸ், இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே, பூட்டான் பிரதமர் ஷேரிங் டோப்கே உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
அப்போது திடீரென மாநாடு நடைபெறும் டெல்லி பாரத் மண்டப பகுதிக்குள் உள்ளே புகுந்த காங்கிரஸ் கட்சியினர் மேலாடையை கழற்றி போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் அமெரிக்கா, இந்தியா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக கோஷமிட்டதுடன், பிரதமர் மோடிக்கு எதிராகவும் முழக்கமிட்டனர். இதனால் மாநாட்டு அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.. அவர்களை போலீஸார் கைது செய்தனர்.



