ஷாக்… துப்பாக்கியுடன் ஈரானுக்கு மிரட்டல் விடுத்த டிரம்ப்!

இனி நல்லவனாக இருக்கப்போவதில்லை என்று கையில் துப்பாக்கியுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ட்ரூத் சோஷியல் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் துப்பாக்கியை ஏந்தியபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில், “இனிமேல் நான் நல்லவனாக இருக்கப்.போவதில்லை. ஈரானால் இணைந்து செயல்படமுடியவில்லை. அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது எப்படி என்று கூட அவர்களுக்கு தெரியவில்லை. அவர்கள் விரைவில் புத்திசாலித்தனமாக நடக்க வேண்டும்..அணு திட்டம் தொடர்பான தீர்வு விரைவில் எட்டப்படாவிட்டால், அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டை மேற்கொள்ளும்” என்று அதில் பதிவிட்டுள்ளார்.
ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, ரஷ்ய அதிபர் புதினை நேரில் சந்தித்து ஆதரவு கோரியிருந்தார். இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த பதிவை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *