மேற்கு வங்காளத்தில் 92.72 சதவீத வாக்குகள் பதிவு!

மேற்கு வங்காளத்தில் நடந்த முதல்கட்ட சட்டமன்றத் தேர்தலில் 92.72 சதவீத வாக்குகள் பதிவானது.

மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதன்படி, நேற்று (ஏப்ரல் 23) 152 தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தலும், 29-ம் தேதி 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தலும் நடத்தப்படும். பதிவான வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

மேற்கு வங்காளத்தில் முதற்கட்ட தேர்தலில் வாக்களிக்க 3 கோடியே 60 லட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றிருந்தனர். தேர்தலை முன்னிடு 2 ஆயிரத்து 450 கம்பெனி (2 லட்சத்து 50 ஆயிரம்) துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் முதற்கட்டமாக 152 தொகுதிகளில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இதற்காக நேற்று காலை முதல் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்கு மையங்களுக்கு சென்று வரிசையில் நின்றி வாக்களித்தனர். இதனால் பிற்பகல் 3 மணியளவில் 78 சதவீதத்திற்கும் அதிகமான வாககுகள் பதிவாகின. பின்னர் மாலை 6 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. அப்போது 92.72 சதவீத வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *