
விலைவாசி உயர்வு நாயகன் பிரதமர் மோடி. அவரின் வசூல் வேட்டை தொடர்கிறது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. இதில் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலையை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் 144 ரூபாயும், ஏப்ரலில் 200 ரூபாயும் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், வணிக பயன்பாட்டு கியாஸ் சிலிண்டர் விலை இன்று (மே 1) அதிரடியாக உயர்ந்துள்ளது. 19 கிலோ வர்த்தக சிலிண்டரின் விலை 993 ரூபாய் உயர்ந்து ரூ.3,237-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதே நேரத்தில், 928 ரூபாய் 50 காசாக உள்ள வீட்டு உபயோகத்துக்கான எரிவாயு சிலிண்டர் விலை மாற்றமின்றி அப்படியே தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கியாஸ் சிலிண்டர் விலை உயர்விற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கும் பதிவில், ” விலை உயர்வின் நாயகன் மீண்டும் சாட்டையால் அடித்துள்ளார். இன்று வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் விலையை மேலும் ரூ. 993 உயர்ந்துள்ளார்.
மோடி கடந்த 4 மாதங்களில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை உயர்த்தியதன் விவரம்:-
ஜனவரி 1 – ரூ. 111
பிப்ரவரி 1 – ரூ. 50
மார்ச் 1 – ரூ. 31
ஏப்ரல் 1 – ரூ. 218
மே 1 – ரூ. 993
மொத்தம் ரூ. 1.518
கடந்த 4 மாதங்களில் வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ. 1. 518 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இன்னும் 8 மாதங்கள் உள்ளன…
விலைவாசி உயர்வு நாயகன் பிரதமர் மோடி. மோடியின் வசூல் வேட்டை தொடர்கிறது. வெறும் 4 மாதங்களில் வணிக சிலிண்டரின் விலை ரூ.1,518 உயர்ந்துள்ளது. மோடி அரசுக்கு மக்களிடமிருந்து பணத்தைப் பறிக்க மட்டுமே தெரியும்” என்று கண்டனம் தெரிவித்துள்ளது.



