தெலங்கானா ராஷ்டிர சேனா… புதிய கட்சியைத் தொடங்கினார் கவிதா!

தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.

தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ். இவர் 2022-ம் ஆண்டு தெலங்கானா ராஷ்டிர சமிதி என்ற தன் கட்சியின் பெயரை பாரத் ராஷ்டிர சமிதி என மாற்றினார். காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்டத்தில் தனது தந்தை சந்திரசேகர ராவின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக தனது உறவினர்களான ஹரிஷ் ராவ், சந்தோஷ் குமார் ஆகியோர் மீது கவிதா குற்றம் சாட்டினார். இதனால் கடந்த 2025 செப்டம்பர் 3-ம் தேதி கட்சியில் இருந்து கவிதா இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பிஆர்எஸ் கட்சியில் இருந்தும், தனது மேலவை உறுப்பினர் பதவியில் இருந்தும் கவிதா விலகினார்.

இதையடுத்து ‘தெலுங்கானா ஜக்ருதி’ என்ற கலாச்சார அமைப்பை தொடங்கி இயங்கி வந்தார். இந்த நிலையில், தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் மேட்சல் மாவட்டத்தில் உள்ள முனீராபாத்தில் உள்ள ஒரு தனியார் மைதானத்தில், புதிய கட்சியின் பெயர், கொடி ஆகியற்றை கவிதா இன்று(ஏப்ரல் 25) வெளியிட்டார். அதன்படி தெலங்கானா ராஷ்டிர சேனா(டிஆர்எஸ்) என தனது கட்சிக்கு கவிதா பெயர் வைத்துள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *