
மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள மெட்ரோ கட்டுமான தளத்தில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையின் பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் மெட்ரோ ரயிலுக்கான கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இன்று (ஏப்ரல் 15) அதிகாலை இப்பணியின் போது பயங்கர விபத்து நடைபெற்றுள்ளது.
கட்டுமான தளத்தில், கனமான தூண் மேலே உயர்த்தப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த தூண் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன் அதை மேலே உயர்த்த பயன்படுத்தப்பட்ட கிரேன் இயந்திரமும் கவிழ்ந்தது.இதனால் உடனடியாக பணிகள் நிறுத்தப்பட்டு மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. இதுவரை உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.



