காலையிலேயே இடியாய் இறங்கிய செய்தி… பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மேற்காசிய போர் காரணமாக உலக அளவில் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கடந்த 15-ம் தேதி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில், இன்று ( மே 19) மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன…. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் 87 பைசா அதிகரித்து ரூ.104.49-க்கு விற்பனையாகிறது. டீசல் விலை லிட்டருக்கு 91 காசுகள் அதிகரித்து ரூ.96.11 ஆக விற்பனையாகிறது. கடந்த 4 நாட்களில் லிட்டருக்கு ரூ.4 வரை பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அனைத்துப் பொருட்களின் விலை உயரும் அபாயம் மீண்டும் ஏற்பட்டுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *