தமிழ் புத்தாண்டு புதிய தொடக்கங்களின் கொண்டாட்டம்: பிரதமர் மோடி வாழ்த்து

தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடும் தமிழ்நாட்டு மக்களுக்கு தமிழ் மொழியில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் சித்திரைல முதல் நாளான இன்று (ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. விசுவாவசு ஆண்டு முடிந்து பராபவ தமிழ்ப் புத்தாண்டு இன்று தொடங்கியுள்ளது. இதனையொட்டி தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மொழியில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ” புனிதமான புத்தாண்டு தினத்தையொட்டி இனிய நல்வாழ்த்துகள். இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும், வெற்றியும், நல்ல ஆரோக்கியமும் நிறைந்திருக்க நான் பிரார்த்திக்கிறேன். சிறப்புமிக்க இந்த நாள் புதுப்பித்தல், நம்பிக்கை மற்றும் புதிய தொடக்கங்களின் கொண்டாட்டமாகும். இது தமிழ்ப் பண்பாட்டின் பெருமையைப் போற்றும் ஒரு தருணமாகும்.

அதன் இலக்கியம், இசை, கலை,, தத்துவம், பக்தி ஆகியவற்றின் வளமான பராம்பரியம் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது. சிறப்புமிக்க இந்த நாள் நமது சமூகத்தில் ஒற்றுமை உணர்வை மேலும் வளர்க்கட்டும். மகத்தான தமிழ்ப் பண்பாட்டால் உத்வேகம் பெற்று, நாம் வெற்றியின் புதிய சிகரங்களை அடைவதோடு, இயற்கையுடனான நமது பிணைப்பையும் ஆழப்படுத்திக் கொள்வோம்” என்று கூறியுள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *