
ஆந்திராவில் கார் மரத்தில் மோதி மென்பொருள் பொறியாளர் பலியானார்.
கர்நாடகா மாநிலம், சுல்லியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சசிகலா பட். இவரது ஒரே மகள் கஷிப்ரா(27). இவர் சுல்லியாவில் உள்ள கேவிஜி fகல்லூரியில் டிப்ளமோ படிப்பை முடித்து விட்டு கர்நாடகாவில் உள்ள நிட் பல்கலைக்கழகத்தில் எம்.டெக் பட்டத்தை பெற்றார். இவர் பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், தனது சக ஊழியர்களுடன் பெங்களூருலில் இருந்து ஆந்திரப் பிரதேசத்திற்கு கஷிப்ரா சுற்றுலா சென்றார். இந்த நிலையில், காரை ஓட்டிச்
சென்ற டிரைவர், மரத்தில் மோதினார். இதில் சம்பவ இடத்திலேயே கஷிப்ரா உயிரிழந்தார். மேலும் அவருடன் காரில் பயணம் சென்ற மூன்று சக ஊழியர்கள் படுகாயமடைந்தனர். காரின் டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் அவர் காரை மரத்தில் மோதியது தெரிய வந்தது. இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



