
கேரள மாநில முதலமைச்சராக வி.டி.சதீசன் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
கேரளா மாநிலத்தில் ஏப்ரல் 9-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் 102 தொகுதிகளுடன் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யூடிஎஃப்) ஆட்சியைக் கைப்பற்றியது. இதில் காங்கிரஸ் மட்டும் 63 தொகுதிகளில் வென்றது. இடது சாரி கூட்டணி கட்சிகள் 35 தொகுதிகளிலும், பாஜக 3 தொகுதிகளிலும் வென்றன
கேரள சட்டமன்றத்தில் முதலமைச்சர் யார் என்பதில் கடும் போட்டி ஏற்பட்டது. 11 நாட்களுக்குப் பின் வி.டி.சதீசன் முதலமைச்சராக மே 14-ம் தேதி காங்கிரஸ் தலைமையால் அறிவிக்கப்பட்டார்த. இந்த நிலையில் வி.டி.சதீசன் கேரள மாநில முதலமைச்சராக பதவியேற்றார். திருவனந்தபுரத்தில் உள்ள சென்ட்ரல் அரங்கத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத அர்லேகர், வி.டி.சதீசனுக்கு பதவிப்பிரமாணமும் ரகசியக்காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். மேலும் முதல்வருடன் ரமேஷ் சென்னிதலா, குஞ்ஞாலி குட்டி உள்ளிட்ட 20 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, நாடாளுமன்ற உறுப்பினர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சியைச் முதலமைச்சர்களான சித்தராமையா, ரேவந்த் ரெட்டி மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். கேரளத்தின் முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.



