
5 மாநில தேர்தலுக்குப் பின் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுமா என்று பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 29 அன்று முடிவடைகிறது. இதன் பின்னர், எரிபொருள் விலைகள் அதிகரிக்கக்கூடும் என்று தனியார் கோடக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில், இந்த அறிக்கைக்கு மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 120 அமெரிக்க டாலர் அளவில் நீடித்தால், லிட்டருக்கு ரூ.28 வரை விலை உயர்வு ஏற்படலாம் என அந்த அறிக்கையில் கணிக்கப்பட்டிருந்தது.
இத்தகைய செய்திகள் மக்களிடையே அச்சமும் பதற்றமும் ஏற்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்ட. தவறான மற்றும் தவறாக வழிநடத்தும் தகவல்களாகும். என அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்த்தாத ஒரே நாடு இந்தியாதான். சர்வதேச சந்தையில் விலை அதிகரிப்பின் தாக்கத்தில் இருந்து இந்திய மக்களை… பாதுகாக்க அரசு மற்றும் எண்ணெய் பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



